May 11, 2021

எழுத்தாளர் ம.காமுத்துரை

 தொகுப்பு : அ.உமர் பாரூக்

எழுதப்படுகிற ஒவ்வொரு படைப்பின் நோக்கமும் மக்களைச் சென்றடைவதுதான். அதேசமயம் அது சாமான்ய மக்களுக்கானதாக இருக்கவேண்டும். அம்மக்களின் வாழ்நிலையிலிருந்து அவர்களை மேம்படுத்துவதாய் அமைய வேண்டும்என்று குறிப்பிடும் எழுத்தாளர் . காமுத்துரை 1980 களில் எழுதத் துவங்கி, தற்போது வரை தொடர்ந்து எழுதி வரும் இலக்கிய ஆளுமை.

எழுத்தாளர் ம.காமுத்துரை

படிப்பிற்குச் சிறிதும் தொடர்பற்ற, எளிய குடும்பத்துப் பின்னணியில் பிறந்து, வளர்ந்த .காமுத்துரை தேனி அல்லிநகரத்தில் வசிக்கிறார். பள்ளிக்கல்வி முடித்து .டி.. பயிற்சி பெற்று, வெல்டராக தன் தொழில் வாழ்வினைத் துவங்கியவர், அதில் நிலைபெற இயலாமல் தபால் சேகரிப்பவர், மருந்துக்கடை பணியாளர், செருப்புக்கடை பணியாளர், ஒர்க் ஷாப்பில் உதவி ஆள், ஸ்பின்னிங் மில் தொழிலாளி, ரொட்டி வியாபாரம், தையல் கடையில் காஜா பையன், செய்தித்தாள் மற்றும் புத்தகம் வினியோகிப்பாளன் என்று பத்துக்கும் மேற்பட்ட சிறு, குறுந்தொழில்களைச் செய்து தற்போது வாடகைப் பாத்திரக்கடையை நடத்தி வருகிறார்.

அவரது தங்கை வாசிப்பதற்காக நூலகத்திற்குள் நுழைந்த .காமுத்துரை குரும்பூர் குப்புசாமி, அனுராதா ரமணன், புஷ்பா தங்கதுரை, தாமரை மணாளன், மகரிஷி, லட்சுமி, பாக்கியம் ராமசாமி, தேவன் நாவல்கள் வழியாக மு.வரதராசனாரின் நாவல்களை வாசிப்பின் துவக்கநிலையில் அடைந்ததாகக் குறிப்பிடுகிறார். தொடரும் வாசிப்பில் பா.செயப்பிரகாசம், பூமணி ஆகியோரின் எழுத்துகள் வாசிப்பனுபவத்தை விரிவுபடுத்தியது.

மாணவப் பருவத்திலிருந்தே கவிதை எழுதுவதற்கான முயற்சிகளை .காமுத்துரை துவங்கியிருந்தாலும், கவியரசு கண்ணதாசன் மறைவிற்காக எழுதிய கவிதைராணிஇதழில் பிரசுரமாகிறது. இதுவே முதல் பிரசுரம். தொடர்ந்து எழுத்தாளர் அல்லிஉதயன் துவங்கியவிடியும்சிற்றிதழின் அறிமுகம் கிடைக்க, கவிதைகளைத் தொடர்கிறார். 1982 ஆம் ஆண்டு அல்லிஉதயன் தொகுத்தசிறை மீட்கும் சிந்தனைகள்கவிதை நூலில் இவருடைய கவிதைகள் இடம்பெறுகின்றன.

எழுத்தாளர் அல்லிஉதயனின் தொடர்பு .காமுத்துரையை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்திடம் கொண்டு சேர்க்கிறது. இவருடைய முதல் சிறுகதைஓய்வு கொள்ளும் ஊர்திகள்’ 1983 ஆம் ஆண்டு செம்மலர் இதழில் பிரசுரமாகிறது. ’விடுபடஎனும் சிறுகதைத் தொகுப்புதான் இவருடைய முதல் நூல். தொடர்ந்து பல இலக்கிய இதழ்களில் சிறுகதைகளை எழுதி வந்த .காமுத்துரை தன்னுடைய முதல் நாவலானமில்லினை எழுதி முடிக்கிறார். ஆனால், ”முற்றாத இரவொன்றில்எனும் இரண்டாவது நாவல்தான் முதலில் வெளிவருகிறது.

ம.காமுத்துரையின் படைப்புலகம் விளிம்புநிலை மக்களுடையது. இதுவரை தமிழிலக்கிய உலகம் சந்தித்திராத பாத்திரங்களை பதிவு செய்கிறது. ம.காமுத்துரையின் படைப்புகளை ஆய்வு செய்து ஒருவர் ஆய்வியல் நிறைஞர் பட்டத்தினையும், கவிஞர் ஜோதிபாரதி அவர்கள் முனைவர் பட்டத்தினையும் பெற்றிருக்கிறார்கள்.

இவருடைய ’கிட்டுணன்’ சிறுகதை லண்டனிலுள்ள பென்குவின் பதிப்பகம் வெளியிட்ட ஆங்கில சிறுகதைகள் தொகுப்பில் எழுத்தாளர் திலீப்குமாரால் மொழியாக்கம் செய்யப்பட்டது. ’லூஸ் ஓனர்’ சிறுகதை சென்னைப் பல்கலைக்கழகத்தின் உருதுமொழிப் பிரிவினரால் உருது மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. கலைஞன் பதிப்பகம் மலேசியாவின் மலேயாப் பல்கலைக்கழகத்தோடு இணைந்து இவருடைய “மிகினும் குறையினும்” சிறுகதைத் தொகுப்பினை வெளியிட்டது.  

  தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தில் மாவட்டப் பொறுப்புகளிலும், மாநிலக் குழுவிலும் பணியாற்றி, தற்போது மாநில செயற்குழு உறுப்பினராக அங்கம் வகிக்கிறார் ம.காமுத்துரை.

ம.காமுத்துரை அவர்களின் படைப்புகள்

 

சிறுகதைத் தொகுப்புகள்

1. விடுபட (சவுத் விஷன் பதிப்பகம் )

2. நல்லதண்ணிக்கிணறு (அன்னை ராஜேஸ்வரி பதிப்ப்கம் )

3. காமுத்துரை கதைகள் (கலைஞன் பதிப்பகம்)        

4. கப்பலில் வந்த நகரம் (சந்தியா பதிப்பகம்) 

5. நாளைக்குச் செத்துப் போனவன் (பாரதி புத்தகாலயம்)

6. கனா (வம்சி பதிப்பகம்)  

7. பூமணி (ஒரேகதையை பத்து கோணங்களில் எழுதியது) (அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம்)

8.  குல்பி ஐஸ் விற்பவனின் காதல் கதை (விகடன் பதிப்பகம்)

9. புழுதிச்சூடு (வெர்சோ பேஜஸ் பதிப்பகம் )

10. மிகினும் குறையினும் ( கலைஞன் பதிப்பகம் )

11. கருப்புக்காப்பி (அகரம் வெளியீடு )

12. இன்னுமொரு வாக்குமூலம் ( வாசகசாலை வெளியீடு )


நாவல்கள்

1- முற்றாத இரவொன்றில் (பாரதி புத்தகாலயம்)..

2- மில் (அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம்)

3.  கோட்டை வீடு (முதல் பதிப்பு- மருதா பதிப்பகம், அடுத்த பதிப்பு எதிர் வெளியீடு)

4. அலைவரிசை (அகரம் பதிப்பகம் )                                                     

5. குதிப்பி (டிஸ்கவரி புக் பேலஸ்)

 

பெற்ற விருதுகளும், பரிசுகளும்

✪  தமுஎச சிறுகதைப்போட்டியில் பட்டியல் கதை (அருணகிரி)

✪  குமுதம் வெள்ளிவிழா கதைப்போட்டியில் சிறப்பு பரிசுக்கதை (மௌனம் அறு)

✪ 1998 ஆகஸ்ட் மாதத்தின் சிறந்த சிறுகதைக்கான அமரர் ஜோதிவிநாயகம் நினைவு பரிசு (களியாட்டம்)

✪  2010 ல் மில் நாவலை ஆண்டின் சிறந்த நாவலாக உயிர்மை- சுஜாதா அறக்கட்டளை தேர்வு செய்து ரூபாய் பத்தாயிரம் ரொக்கப்பரிசு பெற்றது. 

✪  எழுத்தாளர் பிரபஞ்சன் நினைவு நாவல் போட்டியில் முதல் பரிசு (2019)

✪ 1998 ஆம் ஆண்டின் சிறந்த சிறுகதை நூலுக்கான திருப்பூர் தமிழ்ச்சங்க விருது ( நூல்: நல்லதண்ணிக் கிணறு)

✪  ஆதித்தனார் நூற்றாண்டு நினைவு நாள் விருது

✪ இளங்குயில் இலக்கிய இயக்கத்தின் ஆண்டு விருது

✪  நூலக ஆணைக்குழுவின் சிறந்த படைப்பாளர் விருது

✪  சுஜாதா அறக்கட்டளை உயிர்மை இதழின் சிறந்த நாவலுக்கான விருது – மில் -  2010

✪  ஆனந்தவிகடன் வழங்கிய சிறந்த நாவலாசிரியருக்கான விருது – நாவல்: மில் 2010

✪ திருச்சி எஸ்.ஆர்.வி. கல்வி நிறுவனம் வழங்கிய சிறந்த எழுத்தாளருக்கான படைப்பூக்க விருது  மற்றும் ரொக்கப்பரிசு – 2013

✪ கோட்டைவீடு நாவலுக்காக - படைப்பாக்க மேன்மை விருது (தமிழ்நாடு முற்போக்கு கலைஇலக்கிய மேடை -2015)

✪  தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் 2015 ம் ஆண்டின் சிறந்த சிறுகதைத் தொகுதிக்கான விருது (புழுதிச் சூடு)

✪  மதுரை நகைச்சுவை மன்றம் சிறந்த இலக்கியச் சான்றாளர் விருது 2016

✪  தேனி ஹனிபீ ஜே சி வழங்கிய சல்யூட் சைலண்ட் அவுட்ஸ்டாண்டிங் ரைட்டர் விருது’ 2018

✪  திருப்பூர் இலக்கிய விருது (அலைவரிசை நாவலுக்காக) 2018

✪  தேனி பட்டர்ஃப்ளை இயக்கம் வழங்கும் இலக்கியச் சாதனையாளர் விருது 2018

✪  செளமா நாவல் விருது 2020 (குதிப்பி)

இணைய இணைப்புகள்

காமுத்துரை சிறுகதைகள்

மில் நாவல் குறித்த செம்மலர் கட்டுரை

’முற்றாத இரவொன்றில்’ நாவல் குறித்து இயக்குநர் சசி உரை

'குதிப்பி’ நாவல் விமர்சனம் - நகர்வு மின்னிதழ்

’அலைவரிசை’ நாவல் குறித்த வாசகர் மதிப்பீடு - நூலரங்கம்