தொகுப்பு : மு.அராபத் உமர்
மு.செந்தில் குமார் என்ற இயற்பெயர் கொண்ட கம்பம்
புதியவன் கவிஞர், சிறுகதையாளர், ஆய்வாளர்,
கட்டுரையாளர் என்று பன்முகம் கொண்டவர். கு.வி.முத்துச்சாமி -
மு.பெருமாயம்மாள் தம்பதியருக்கு 22.05.1975 இல் மகனாகப் பிறந்தார்.
தன்
பள்ளிப்படிப்பை கம்பத்தில் உள்ள அரசு கள்ளர் பள்ளியில் துவங்கி, பின் ஏல விவசாயிகள் மேல்நிலைப்பள்ளியில் நிறைவு செய்தார். பள்ளியில் படிக்கும் காலத்திலேயே
கட்டுரைப்போட்டிகளிலும், பேச்சுப்போட்டிகளிலும்
பங்கேற்று நிறைய பரிசுகளைப் பெற்றுள்ளார்.
அண்ணாமலை
பல்கலைக்கழகத்தில் எம்.ஏ, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பி.எட். கல்வியை நிறைவு செய்துவிட்டு,
தான் படித்த கம்பம் அரசு கள்ளர் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக 13 ஆண்டுகள் பணிபுரிந்தார்.
அதன்
பின் அண்ணாமலைப் பல்கலைகழத்தில் ஆய்வியல் நிறைஞர் (எம்.பில்) பட்டத்திற்காக கம்பம் மாயவனின் ஹைக்கூ கவிதை நூல்கள் குறித்து தன்னுடைய ஆய்வை நிறைவு செய்து, பட்டம் பெற்றுள்ளார். தனது ஆய்வேட்டினை எளிமைப் படுத்தி, “போதிமரம்” என்ற நூலாக 2009 ஆம் ஆண்டு எழுதி, வெளியிட்டார்.
சிறுவயதில்
இருந்தே வாசிப்பு ஆர்வமுள்ள புதியவன் அவர்கள் நண்பர்கள் நற்பணி இயக்கத்தை துவங்கி, மக்கள் சேவைகளிலும், இலக்கியப் பணிகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தோடு ஏற்பட்ட தொடர்பின் காரணமாக வாசிப்பும், மேடைப் பேச்சும் ஆழமானது. 2008 ஆம் ஆண்டு அய்.தமிழ் மணி இயக்கிய “சமம்”
குறும்படத்தில் நாயகனாக திறம்பட நடித்தார்.
ஹைக்கூ
குறித்த ஆய்விற்குப் பிறகு, ஹைக்கூ எழுதுவதில் ஆர்வம் கொண்டு எழுதத்துவங்கினார். இவருடைய முதல் ஹைக்கூத் தொகுப்பு
2012 ஆம்
ஆண்டு “குறையொன்றுமில்லை” என்ற பெயரில் வெளியானது. தொடந்து 2014 இல் “கூட்டாஞ்சோறு” நூலும் வெளிவந்தது.
ஹைக்கூக்கள் மட்டுமின்றி,
கட்டுரைகள், சிறுகதைகள் என்று புதியவன் அவர்களின்
இலக்கியப் பயணம் தொடர்ந்தது. கவிஞர் மு.முருகேஷ் அவர்களின் ஹைக்கூ படைப்புகள் குறித்து ஆய்வு செய்து, மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.
பல்கலைக்கழக
ஆய்வுத் தொகுப்புகளுக்காக எழுத்தாளர் தேனி சீருடையான் அவர்களைப் பற்றிய
ஆய்வு நூலினை 2015 இலும், மதுரை பொன் விக்ரம் கவிதைகள் குறித்த ஆய்வு நூலை
2016 இலும் வெளியிட்டார்.
2016 ஆம்
ஆண்டு கலைஞன் பதிப்பகம், அண்ணாமலைப் பல்கலைகழகம் மற்றும் மலாயாப் பல்கலைகழகம் இணைந்து வெளியிட்ட தமிழ் படைப்பாளர் நூல் வரிசையில் ‘கம்பம் எம். பி.
புதியவன் என்னும் தலைப்பில் பேரா. பழனிச்சாமி {உதவிப்
பேராசிரியர் ஹேன்ஸ் ரோவர் கல்லூரி} அவர்களின் முனைப்பில் ஆய்வு நூல் வெளிவந்துள்ளது.
2017 இல்
மலேசியா தமிழ்மணி மன்றம், மதுரை காமராசர் பல்கலைகழகம் இணைந்து ‘தமிழ்ச் சிறுகதை நூற்றாண்டில் நூறு சிறுகதைகள்’ என்னும் தலைப்பில் நடத்திய உலகளாவிய சிறுகதைப் போட்டியில் “தப்பு” என்னும் சிறுகதை தேர்வுபெற்று தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.
2018 இல்
ப. குணசேகர் ’ஹைக்கூ
உலகு’ என்னும் தலைப்பில் வெளியிட்ட தமிழக ஹைக்கூக் கவிஞர்களின் கவிதைத் தொகுப்பில் புதியவனின் ‘துளிப்பாக்’ கவிதைகள் இடம்பெற்றுள்ளன. 2018 இல் காவ்யா பதிப்பகத்தார் வெளியிட்ட ‘வைகைக் கரையோர எழுத்தாளர்களின் கதைகள்’ என்னும் தொகுப்பில் “ஒரு நிமிடம்” என்னும் சிறுகதை இடம்பெற்றுள்ளது.
2021 ஆம்
ஆண்டு உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ‘மு. முருகேஷ் ஹைக்கூக் கவிதைகளில் உள்ளடக்கப் பகுப்பாய்வு’ என்னும் தலைப்பில் புதியவன் அவர்களின் நூல் வெளியிடப்பட்டது.
மாணவர்களுக்கான
பேச்சுப்போட்டி, கவிதை கட்டுரை, நாடகம், கலை இலக்கிய போட்டிகள் நடத்தி மாணவர் திறனை வெளிப்படுத்துதல், தேசிய விழாக்களை நடத்துதல், மாதாந்திர இலக்கிய கூட்டங்கள், சங்கத்தமிழ் கூட்டங்கள் ஏற்பாடு செய்தல் – பங்கேற்றல் போன்ற பணிகளை தொடர்ந்து செய்து வரும் புதியவன் அவர்கள் கிராமத் தூய்மைப் பணி, மருத்துவ முகாம்கள் நடத்துதல், மக்கள்
விழிப்புணர்வு முகாம்கள் ஏற்பாடு செய்தல் போன்ற களப்பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.
பல்வேறு
போட்டிகளில் நடுவர், தொலைக்காட்சி பங்கேற்பு, படைப்பாளர் நிகழ்வில் பங்கேற்பு, நாற்பதற்கும் மேற்பட்ட பன்னாட்டு, தேசியக் கருத்தரங்குகளில் கட்டுரை சமர்ப்பிப்பு. கருத்தரங்க அமர்வுகளில் தலைமையேற்றல் – நடத்துதல். மதுரை வானொலியில் பல்வேறு தலைப்புகளில் சொற்பொழிவு என தொடர்ந்து இயங்கி வருகிறார் எழுத்தாளர் புதியவன்.
தமிழ்நாடு
முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், விவேகானந்தர் பேரவை. நண்பர்கள் சமூக இலக்கியப்பேரவை ஆகிய அமைப்புகளில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார். தற்போது மதுரை செந்தமிழ்க் கல்லூரியில் உதவிப்
பேராசிரியராகப் பணிபுரிகிறார்.
வெளிவந்துள்ள நூல்கள்
1. போதி மரம் – ஆய்வு நூல் - 2009
2. குறையின்றுமில்லை –
ஹைக்கூ தொகுப்பு – 2012
3. கூட்டாஞ்சோறு -
ஹைக்கூ தொகுப்பு – 2014
4. தேனி சீருடையான் –
ஆய்வு நூல் – 2015
5. மதுரை பொன் விக்ரம் கவிதைகள் – ஆய்வு நூல் - 2016
பெற்றுள்ள பரிசுகள், விருதுகள்
1.
தமிழ்நாடு
அறிவியல் இயக்கம் 2012- மாநில அளவிலான சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு.
2.
தமிழ்நாடு
அறிவியல் இயக்கம் 2012- ஆம் ஆண்டில் தேசிய அறிவியல் நாள் விழாவிற்காக நடத்திய தேனி மாவட்ட அளவிலான சிறுகதை போட்டி முதல் பரிசு.
3.
2012- குறுங்கவிதை{KKI} இதழ் நடத்திய மாநில அளவிலான ஹைக்கூக் கவிதைப் போட்டியில் பரிசு.
4.
2012- உலகத்தமிழ் எழுத்தாளர் சங்கம் நடத்திய சிறுகதை போட்டியில் மாநில அளவில் மூன்றாம் பரிசு.
5.
2012- வரமலர் சிறுகதைப் பரிசு.
6.
2013- காவியம் இதழ் சிறுகதைப் போட்டியில் மாநில அளவிலான பரிசு.
7.
2006- “சிகரம் தொட்ட ஆசிரியர்” {தமிழ் பாடம் கற்பித்தல் போட்டி} கம்பம் வட்டார அளவிலும், தேனி மாவட்ட அளவிலும்.
8.
2013-14- “கலைச்சுடர் ஒளி” விருது- தமிழ்நாடு
கலைப்பயிற்சி மையம் சேலம்.
9.
2015- “மித்ரா துளிப்பா விருது”- செல்லம் நிலையம் சென்னை.
10. 2019- தேனி வையைத் தமிழ்ச் சங்கம் & சங்கத்தமிழ் அறக்கட்டளை- “தமிழ்த் தொண்டர்” விருது பெற்றார்