Jul 27, 2021

எழுத்தாளர் தங்கம் மூர்த்தி

தொகுப்பு : சாய் ஆனந்தி

                            ‘நெல்சன் மண்டேலா’ சிறையில் இருந்த பொழுது கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்கள் எழுதிய இக்கவிதை மிகவும் பிரபலமாகி இலக்கிய வட்டத்தில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது 

கருப்பு ஆட்சிக்கு வரும்

இன்று அந்தியிலும்

நாளை ஆப்பிரிக்காவிலும்

                    1964 ஆகஸ்ட் 19ஆம் தேதிபுதுக்கோட்டை மாவட்ட அறந்தாங்கி ஒன்றியத்தின் சுப்பிரமணியபுரம் என்ற சிற்றூரில்டாக்டர்திருகே.கே.தங்கம்திருமதிஜெயலெட்சுமி தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார்இவர் பெற்றோர்கள் இருவரும் பட்டதாரிகள்டாக்டர் முத்துலட்சுமி ரெட்டிசுதந்திர போராளி சத்யமூர்த்திநடிகர் ஜெமினி கனேசன்சகாயம் ஐ..எஸ்போன்ற பிரபலங்கள் பயின்ற புதுக்கோட்டையின் “இஸ் அய்னஸ் தி ராஜாஸ் கல்லூரி”யில் பட்டம் பெற்றார்பிறகு இரண்டு முதுகலை பட்டப்படிப்புகளை ஆங்கில இலக்கியம் (எம்..) மற்றும் கல்வியியலிலும் (எம்.எட்.பெற்றார்இவரது துணைவியார் திருமதி முஅஞ்சலிதேவி (எம்.., எம்.எட்.) அவர்கள் புதுக்கோட்டைசந்தைப்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்இவர்களுக்கு நிவேதிதா மூர்த்தி (பி.டெக்எம்.பி..) காவியா மூர்த்தி (எம்.பி..) என இரண்டு மகள்கள் உள்ளனர்மூத்த மகள் நிவேதிதாவிற்கு நாகா அதியன் (பி.டெக்என்பவருடன் திருமணமாகிதங்கம் மூர்த்தி அவர்களுக்கு சாய் பிரணவ் என்ற பேரனும் உள்ளார்.   



  
             
திருதங்கம் மூர்த்தி அவர்கள் கவிஞர்எழுத்தாளர்கல்வியாளர்கல்வியியல் விமர்சகர்இலக்கியவாதிசொற்பொழிவாளர்நிறுவனர்மற்றும் சமூக சேவகர் என பன்முகத்தன்மை கொண்டவர்.    

    புதுக்கோட்டையில் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி கல்வி மற்றும் சமூக அறக்கட்டளையின் அங்கமான “ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலை பள்ளி”யின் தாளாளர் மற்றும் முதல்வராகவும் தங்கம் மூர்த்தி அவர்கள் பணியாற்றி வருகிறார்கல்வியாளரான தங்கம் மூர்த்தி அவர்களுக்கு இயல்பிலேயே இலக்கியம் மீதிருந்த ஆர்வத்தைத் தொடர்ந்து கவிதைகள்குறிப்பாக ஹைக்கூக் கவிதைகள் எழுதத் தொடங்கினார். 1994 ஆம் ஆண்டு தனது முதல் நூலான “முதலில் பூத்த ரோஜா” என்ற ஹைக்கூக் கவிதைத் தொகுப்பை வெளியிட்டார்.

                   இவர் கவிதைகளில் வாழ்வியல் உணர்வுகள் மேலோங்கி இருக்கும்மனிதர்களின் பல முகங்களை எழுத்தோவியமாய் கவிநடையில் அனுபவிக்கத் தரும் படைப்புகளுக்குச் சொந்தக்காரர்இமைக்கா இரவுகளின் தூங்கா நினைவுகள் தரும் பாடங்களை கவிதைகளாய் வடித்து நூலாய் வெளியிட்டுள்ளார்தனது ஹைக்கூக் கவிதைகளை “மழையின் கையெழுத்து – “சைன் ஆப் ரெயின்” என்ற ஆங்கில மொழியாக்க நூலாகவும் வெளியிட்டுள்ளார்.

    கவிஞர் கந்தர்வன் தலைமையேற்ற கவியரங்கில் இவர் முதன் முதலில் அறிமுகமாகி தன் வாய்ப்பினை நிறைவு செய்தவுடன் அரங்கம் அதிர பலத்த கைத்தட்டல்களோடு கவிஞர் கந்தர்வனின் பாராட்டையும் பெற்றார்அந்நிகழ்வு தங்கம் மூர்த்தி அவர்களுக்கு தந்த ஊக்கத்தினைத் தொடர்ந்து கவிஞர் சுரதாகவிக்கோ அப்துல் ரகுமான்கவிஞர் பாலாகவிஞர் சிற்பிகவிஞர் மு.மேத்தாபேராசிரியர் அப்துல் காதர்கவிச்சுடர் கவிதைப்பித்தன்ஏர்வாடி ராதாகிருஷ்ணன்பிச்சினிக்காடு இளங்கோமணலி சோமன்மரபின் மைந்தன் முத்தையாநெல்லை ஜெயந்தா என அனைவரது கவியரங்கங்களிலும் பங்கேற்றுள்ளார்பின்னர் ஏராளமான கவியரங்கங்களைத் தலைமையேற்று சிறப்பாக நிகழ்த்தியுள்ளார்.

                   பல்வேறு கவியரங்க மேடைகளில் ஆற்றிய கவிதைகளைத் தொகுத்து  “கவிதையில் நனைந்த காற்று” என்ற நூலை 2012 இல் வெளியிட்டுள்ளார்.

 

    சாகித்ய அகாடமி தமிழ்ப் பிரிவின் ஆலோசனைக் குழு உறுப்பினராகவும் பொறுப்பாற்றியுள்ளார்திருதங்கம் மூர்த்தி அவர்களின் தேர்ந்தெடுக்கபட்ட கவிதைகள், ‘மதுரை காமராஜர்’ பல்கலைக்கழகம் மற்றும் ‘மனோன்மணீயம் சுந்தரனார்’ பல்கலைக்கழக பாடநூல்களில் இடம் பெற்றுள்ளன.

        மொழியின் சாத்தியங்களை மட்டும் சார்ந்து நகராமல் தனது தனிப்பட்டதெளிவும் அழகிய எளிமையும் மிக்க மொழியில் நவீன தமிழ் கவிதையின் வெகு மக்களுக்கான வடிவத்தைத் தன் கவிதைகளில் வழங்கி வருகிறார் திருதங்கம் மூர்த்தி அவர்கள்கவியரங்கம்கருத்தரங்கம்பட்டிமன்றம்இலக்கிய விழாக்கள்தனிச்சொற்பொழிவுதொலைக்காட்சி மற்றும் இணைய வழி நிகழ்ச்சிகள்ஆகியவற்றில் தொடர்ந்து பங்கேற்றும் வருகிறார்

    நேர்படப் பேசுகிற இவரின் கவிதைகள் ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம்பிரெஞ்சுமலாய் ஆகிய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளனபத்துக்கும் மேற்பட்ட கவிதை நூல்களை இயற்றியுள்ளார்இவரின் கவிதைகள் தனிமனிதனின் தாகத்தை வளர்ப்பதைவிட சமுதாயத்தின் அறிவுத் தாகத்தை வளர்க்கும் விதமாகப் புனையப்பட்டுள்ளது தனிச் சிறப்பு.

வெளிவந்துள்ள நூல்கள்

1.       முதலில் பூத்த ரோஜாஹைக்கூ கவிதைகள், 1994

2.       தங்கம் மூர்த்தி கவிதைகள், 2004

3.       பொய்யெனப் பெய்யும் மழைவள்ளல் அழகப்பர் பதிப்பகம், 2005

4.       என் பண்டிகையின் நாட்குறிப்பிலிருந்து, 2010

5.       கல்வி கரையிலகல்வி பற்றிய கவிதைகள், 2010

6.       கவிதை வெளியினிலே, 2011

7.       மழையின் கையெழுத்து, 2016

8.       கவிதையில் நனைந்த காற்று, 2016

9.       ஹைக்கூ 100, மேன்மை வெளியிடு, 2017                                      

10.    தேவதைகளால் தேடப்படுபவன், 2017

11.    அந்த வானவில்லுக்கு எட்டு நிறங்கள், 2017

12.    கூடு திரும்புதல் எளிதன்று, 2021

விருதுகள்

v  தேசிய நல்லாசிரியர் விருது, 2013

v  மாநில அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது, 2008

v  தமிழக முதலமைச்சர் அவர்களால் “தமிழ்ச் செம்மல்” விருது, 2017

v  தமிழக அரசின் சிறந்த நூலுக்கான விருது - “தேவதைகளால் தேடப்படுபவன்”, 2017

v  கவிமுகில் அறக்கட்டளையின் விருது – “தேவதைகளால் தேடப்படுபவன்”, 2021

v  கவிக்கோ விருது

v  செல்வன் காக்கி விருது

v  கவிஞர் சிற்பி விருது

v  கவிதை உறவு’ வழங்கிய விக்கிரமன் விருது

v  காரைக்குடி தமிழ்த்தாய் அறக்கட்டளை விருது

v  பெஸ்ட் மேன் ஆப் பொயட்ரி அப்ரோச்சஸ் அவார்டு, 2003

v  சாதனையாளர் விருது, 2005

v  சிறந்த சமூக சேவகர் விருது

v  மக்கள் நல கவிஞர்” என புதுக்கோட்டை இலக்கியப்பேரவை வழங்கிய பட்டம்    

       இணைய இணைப்புகள்